வியாழன், 13 ஜூன், 2013

கோழி தீவனம் தயாரிக்க பரங்கிப்பேட்டை மத்தி கருவாடுகள் ஏற்றுமதி

பரங்கிப்பேட்டை:மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கோழித் தீவனம் தயாரிப்பதற்காக பரங்கிப்பேட்டையில் இருந்து மத்தி கருவாடுகள் அதிக அளவில் நாமக்கல்லுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களாக புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் பிடிக்கப்படும் வஞ்சரம், சூரை, கவலை, கெளுத்தி, பாரை, அகிலா, மத்தி உள்ளிட்ட மீன் வகைகளை கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு தினமும் சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.தற்போது நாமக்கல்லில் கோழி தீவனத்திற்கு மத்தி கருவாடுகள் அதிகளவு தேவை உள்ளதால் கடந்த ஒரு வாரமாக உள்ளூர் கருவாடு வியாபாரிகள் மத்தி மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதியில் காய வைத்து பின்னர் கருவாடாக்கி லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர். இதனால் கருவாடு வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. அன்னங்கோவில் கடற்கரையோர மக்களுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக