
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழுக் கூட்டம் கிள்ளையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
டி.ராஜாராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பேசினர்.
மார்க்சிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலராக எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
பரங்கிப்பேட்டை அருகில் அமையவுள்ள ஐ.எல்.எஃப்.எஸ். அனல்மின் நிறுவனம் கடுமையான சட்டமீறல்களை செய்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வரும் தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்களை யாரிடமும் அனுமதிப் பெறாமல் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இரவில் அங்கு பயிரிடப்பட்டுள்ள முந்திரி, சவுக்கு போன்ற பணப் பயிர்களை அழித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோருவது. சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வசதியாக கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக