ஞாயிறு, 2 ஜூன், 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டதால் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அதிக டாலர்கள் செலவாகின்றன. இதைக் காரணம் காட்டி விலை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் (நேற்று நடந்த பிரியபட்டணா இடைத் தேர்தலும்) இப்போதைக்கு வேறு தேர்தல்கள் ஏதும் இல்லாததால் விலையை நேற்றிரவு உயர்த்தியுள்ளனர்.அதே நேரத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் ரூ. 45 குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இதன்மூலம் சென்னையில் பெட்ரோல் விலை, உள்ளூர் வரியை சேர்த்து லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ. 66.85-க்கு விற்கப்படுகிறது.டீசல், உள்ளூர் வரியை சேர்த்து லிட்டருக்கு 61 பைசா உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ. 53.53க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு மானிய விலையில் 9 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு மேலாக மானியம் இல்லாமல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கான விலை ரூ. 45 குறைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக