புதன், 19 ஜூன், 2013

வீராணம் ஏரி வறண்டது :தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி லால்பேட்டையில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை 16 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. வீராணம் ஏரியின் முழுநீர் மட்ட உயரம் 47.50 அடியாகும். இதன் கொள்ளளவு 1465 மில்லியன் கன அடியாகும்.

இந்த ஏரியின் மூலம் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை 45.50 அடியில் இருந்து 47.50 அடியாக உயர்த்தி, அதன் கொள்ளவை 515 மில்லியன் கன அடியாக உயர்த்தி சென்னைக்கு 77 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதாலும், மேட்டூர் நீர் கிடைக்காததாலும் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால், கடல்போல காட்சியளிக்கும் வீராணம் ஏரி வறண்ட நிலைக்கு மாறியதை காணமுடிந்தது.

மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்களின் குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 75 கன அடி நீர் அனுப்புவது படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. வீராணம் ஏரி வறண்டதால் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பருவமழை பொய்த்து விட்டதாலும், வீராணம் ஏரி வறண்டதாலும் குறுவை சாகுபடி கேள்விகுறியாகதான் உள்ளது. இருப்பினும், டெல்டா பகுதியில் மின்மோட்டார்கள் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்

தூர்வார ரூ.40 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில் வீராணம் ஏரியை தூர்வாருவதற்கு ரூ.40 கோடி நிதி அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது  இத்திட்டம்  முறையாக செயல் படுத்தினால் வரும் வருடங்களில் நீர் மேலும் சில  நாட்களுக்கு தேக்கி வைக்க முடியும்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக