புதன், 19 ஜூன், 2013

பரங்கிப்பேட்டை அருகே வாலிபரை மிரட்டிய 20 பேர் மீது வழக்கு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே வாலிபரை மிரட்டிய 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம், 38. இவர் கரிக்குப்பம் அருகே அனுபவத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சவுக்கை கன்று வைத்துள்ளார். கடந்த 6ம் தேதி சென்னையைச் சேர்ந்த சேகர் உட்பட 20 பேர் சவுக்கை தோப்பை ஆள் வைத்து வெட்டும்போது பரமானந்தம் தடுத்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
இதுகுறித்து பரமானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக