சனி, 8 ஜூன், 2013

பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை பரங்கிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய பொறியாளருக்கு, பரங்கிப்பேட்டை நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது.
புதுச்சத்திரம் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் முருகன் கோயிலைச் சேர்ந்த தங்கராசு மகள் புனிதா (23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியாளர் மணிகண்டமூர்த்தி (28) என்பவருக்கும்
பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
திருமணம் செய்வதாக கூறி புனிதாவுடன் மணிகண்டமூர்த்தி பலமுறை உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தன்னை திருமணம் செய்ய மறுத்ததாக மணிகண்டமூர்த்தி மீது, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21-7-2010 அன்று  புனிதா புகார் அளித்தார்.
இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், நீதிபதி பரமசிவம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். பொறியாளர் மணிகண்டமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக