ஞாயிறு, 26 மே, 2013

வத்தக்கரை மீன் இறங்குதளத்தில் இடம் ஒதுக்கித் தர வியாபாரிகள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை வத்தக்கரை அன்னங்கோவிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தில் மீன் வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர கலெக்டருக்கு மீன் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது: பரங்கிப்பேட்டை வத்தக்கரை அன்னங்கோவிலில் புதியதாக மீன் இறங்கு தளம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் மீன் வியாபாரிகள் மீன்களை வாங்கி பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வந்தோம். இப்பொழுது மீன் இறங்குதளம் பணி முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது. மீன் இறங்குதளத்தில் கட்டுவலை படகு உரிமையாளர்கள், மீன் வியாபாரிகளுக்கு இங்கு இடம் இல்லை என்றும் படகுகளை கட்டுவதற்கும், வலைகளை இறக்கி வைக்கவும்தான் இங்கு இடம் என கூறிவருகின்றனர்.வியாபாரிகள் வாங்கும் மீன்களை சுகாதாரமான முறையில் பதப்படுத்தி அனுப்பினால்தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வாங்குவார்கள். சேறும், சகதியுமாக அனுப்பினால் மீன்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள்.எனவே மீன்பிடி தடைக்காலம் முடிவதற்குள் மீன் வியாபாரிகளுக்கு புதியதாக கட்டப்பட்டள்ள மீன் இறங்கு தளத்தில் இடத்தை ஒதுக்கிதர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக