ஞாயிறு, 19 மே, 2013

மீண்டும் இரவு நேர மின்வெட்டு: மக்கள் கடும் அவதி

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மின் உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் கடும் மின்வெட்டு நிலவுகிறது.
   மின் உற்பத்தி 10,000 மெகாவாட்டுக்கும் குறைவாக இருக்கும்போது, கடலூர் மாவட்டத்தில் காலை 3 மணி நேரமும், பிற்பகல் முதல் மாலை வரை 3 மணி நேரமும், மாலை முதல் இரவு வரை 2 மணி நேரமும், இரவு முதல் மறுநாள் காலை வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை என 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் அன்றாடப் பணிகளை செய்ய முடியாமலும், மாணவர்கள் படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.
   விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் மின் உற்பத்தி அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மின்வெட்டு செய்யப்படும் நேரம் கணிசமாக குறைந்தது.
   மே மாதத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்தால், கடந்த ஒரு வாரமாக ஒரு மணி நேரம் கூட மின்சாரம் நிறுத்தப்படாமல் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனால் 16-ம் தேதி முதல் பகலிலும், இரவிலும் 3 முதல் 5 மணிநேரம், மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால், வீடுகளுக்குள் நிலவும் வெப்பம் காரணமாக தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
  ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து தூங்கினால் கொசுக்கள் கடிக்க தொடங்கி விடுகிறது.
   இதனால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக