வியாழன், 16 மே, 2013

தமிழ்நாடு வண்ணமீன் கண்காட்சி பரங்கிப்பேட்டை மெரின் பயாலஜிக்கு முதல் பரிசு

பரங்கிப்பேட்டை :சென்னையில் தமிழக அரசு மீன்வளத் துறை சார்பில் மே 9-12-ல் நடைபெற்ற தமிழ்நாடு மீன்வளத் திருவிழா மற்றும் கண்காட்சியில் அண்ணாமலைப் பல்கலை. அரங்குக்கு முதல் பரிசு மற்றும் விருது வழங்கி கெüரவிக்கப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் கடந்த மே 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழக அரசு மீன்வளத் துறை சார்பில் தமிழ்நாடு மீன்வளத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்தனர்.
இதில் கடல் வண்ணமீன்கள் மற்றும் நன்னீர் வாழ் வண்ணமீன்கள் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.
கடல் வண்ணமீன்களுக்கான பிரிவினில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புலத்தின் சார்பில் முனைவர் தி.த.அஜீத்குமார் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் 10 வகையான க்ளெவ்ன் மீன்கள் மற்றும் இரண்டு வகையான டேம்செல் இன வண்ண மீன்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.
மேலும் 25 விதமன இதர கடல் வண்ணமீன்கள் மற்றும் ஒரு மாதமே ஆன மீன் குஞ்சுகள், நட்சத்திர மீன்கள், சுல்லா மீன்கள் போன்றவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
நிறைவு நாளன்று நடைபெற்ற விழாவில் சிறந்த கடல் வண்ணமீன் அரங்குக்கான முதல் பரிசு மற்றும் விருதை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புலத்துக்கு சமூகநலத் துறை அமைச்சர் பி.வளர்மதி வழங்கி கெüரவித்தார்.
துணைப் பேராசிரியர் முனைவர் தி.த.அஜீத்குமார் விருதைப் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், சென்னை மேயர் சைதை துரைசாமி, பாலகங்கா எம்.பி., மீன்வளத்துறைச் செயலர் ககன்தீப்சிங்பேடி, மீன்வளத் துறை இயக்குநர் முனியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக