ரியாத் :இந்திய தொழிலாளர்களின் நன்னடத்தையை கருத்தில்கொண்டு குடியுரிமை சட்டங்களை மீறிய வகையில் சவுதியில் தங்கியுள்ளவர்கள் தாங்களாகவே வெளியேற முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படாது எனவும் சவுதியில் அனுமதியின்றி தங்கியுள்ள இந்தியர்கள் ஜுலை 6ம் தேதிக்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்:
மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் சவுதி அரேபியா சென்றுள்ளார். அதற்கு முன்னதாக, புதுடெல்லியில் நேற்று உருது பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,”சவுதியில் இருந்து இன்னும் 1 1/2 மாதத்தில் 56,700 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புகின்றனர். இவர்களிடம் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட், விசா இல்லாததால் இந்தியா திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என இவர்கள் அனைவரும் சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.
இவர்களின் சொந்த மாவட்டத்தின் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஆவணங்களை பெற வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்க்க கூடுதலாக 10 அதிகாரிகள் இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சவுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் இந்தியர்கள் தன்னார்வ தொண்டர்களாக தாயகம் திரும்ப விரும்பும் இந்திய தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து வருகின்றனர்.”என்று அவர் கூறினார்.
இதுவரை பெறப்பட்ட 75 ஆயிரம் விண்ணப்பங்களில் 56,700
ஆயிரம் இந்தியர்களுக்கு எக்சிட் பாஸ் வழங்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த எக்சிட் பாஸ்களை நாள் ஒன்றுக்கு 500 என்ற அளவில் சவுதி அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள். இந்த வேகத்தில் சென்றால் ஜூலை 3க்குள் சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்களை மட்டுமே சவுதி அதிகாரிகளில் சரிபார்க்க முடியும். இதனால் ஜூலை 6 க்கு பிறகு 1 லட்சம் இந்தியர்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்தியர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பிரச்னை குறித்து சவுதி இளவரசரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சல்மான் குர்ஷித் வெள்ளிக்கிழமைசவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார்.









Than honorable minister when he is going to come to Kuwait!!!! Kuwait is also under GCC and what is going on in Kuwait i don't know the honorable minister knows or not..............
பதிலளிநீக்கு