திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை அரிமா சங்க 2012-13 ஆண்டிற்கான புதிய தலைவராக முகமது யூனுஸ் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


இவர்கள் பதவியேற்பு விழாவிற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். செயலர் கணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் ஆளுநர் முகமது ரபி புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவரான பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் ஏற்புரை வழங்கினார்.
ஏழைகளுக்கு மாவட்ட தலைமை பண்பு ஒருங்கிணைப்பாளர் முரளி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவைச் செயலர் ரத்தினசுப்ரமணியன், மண்டலத் தலைவர் ராசி முருகப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பாராட்டி பேசினர். விழாவில் பேரூராட்சி துணைத்தலைவர் நடராஜன், வட்டாரத்தலைவர் ரமேஷ்சந்த், மாவட்ட தலை வர்கள் அறிவொளி, கவுஸ் ஹமீது ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக