சிங்கப்பூர் வாழ்
பரங்கிப்பேட்டை இஸ்லாமியர்கள் இன்று ரமலான் நோன்புப் பெருநாளை கொண்டாடி
வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பரங்கிப்பேட்டை சகோதரர்கள்
பங்கேற்றனர். சிங்கை டன்லப் வீதியில் உள்ள அப்துல் கஃபுர் பள்ளி, ஜாமிஆ சூலியா,
பென்கூலன் பள்ளிகளில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர்.
இதில் அதிகமனோர் அப்துல் கஃபுர் பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில்
கலந்துக் கொண்டனர். இங்கு காலை 8.15 மணிக்கு துவங்கிய தொழுகை 8.45 மணிக்கு
முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை சகோதரர்கள் ஒருவருக்கொருவர்
சந்தித்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிகமான வெளிநாட்டுவாழ்
பரங்கிப்பேட்டை சகோதரர்கள் ஒரே இடத்தில் பெருநாள் தொழுகைகளில் சந்தித்துகொள்வது
இந்த பள்ளிவாசல்தான் என்பது சிறப்புக்குரியது.
நன்றி MYPNO.COM


நன்றி MYPNO.COM
0 கருத்துகள்:
கருத்துரையிடுக