பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சஞ்சிவிராயர் கோவில்
தெரு, சின்னக்கடை ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் சாலையோர
ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில்
அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் எதிர் எதிரே இரண்டு வாகனங்கள் வந்தால்
ஒதுங்கிச் செல்லக்கூட இடம் இல்லாததால் யார் பின்னால் எடுப்பது என டிரைவர்களுக்குள்
ஈகோ பிரச்னை ஏற்பட்டு சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
டிரைவர்களிடம் சமரசம் செய்த பின்னரே வாகனங்களை பின்னால் எடுத்து செல்கின்றனர். இதனால் சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டை, புதுக்குப்பம் செல்லும் பேருந்துகள் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து மாற்று வழியில் சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கலாம்.
சாமியார்பேட்டையில் இருந்து சிதம்பரத்திற்கு வரும் பேருந்துகள் வழக்கம்போல் வந்து செல்லலாம்.எனவே அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க பயணிகள் போக்குவரத்தை மாற்று வழியாக அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: mypno.com








0 கருத்துகள்:
கருத்துரையிடுக