புதன், 1 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு: 44-வது முறையாக ஒத்திவைப்பு

பரங்கிப்பேட்டை:தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்ததால், தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கின் விசாரணை 44-வது முறையாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

 அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்ததால், அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குத் தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். பின்னர் ஜெயலலிதா மேல்முறையீட்டின்படி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. தடை உத்தரவால் இதுவரை இவ்வழக்கு 43 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூலை 31-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி (பொறுப்பு) ராபர்ட் கென்னடி ரமேஷ் இவ்வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக