
வானம் கடுமையான மேகமூட்டத்துடன் இருந்ததால், வழி தெரியாமல் அந்த விமானம்
மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்நாட்டு காபினெட் மந்திரி உட்பட அதில்
பயணம் செய்த 32 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
விமான தரை இறங்குவதற்கு முன்பு விமானியுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து
பேசிகொண்டிருக்கும்போது, அந்த விமானம் விபத்துக்குள்ளான சத்தம் கேட்கப்பட்டதாக
சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து அப்பகுதியில் இயக்கி வரும் தீவிரவாத
இயக்கம் இந்த விபத்து மழையின் காரணமாக நடந்திருக்கிறது இதற்கு நாங்கள் பொறுப்பல்ல
கூறியுள்ளது.
விமான விபத்து என்பது சூடானில் ஒரு சாதாரண விசயமாகும். ஏனெனின்ல் அங்கு
விமானங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை இதனால் அந்நாட்டு விமானங்கள் ஐரோப்பா செல்ல
தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கார்டோமன் விமான தளத்தில் இறங்கிய
விமானம் வெடித்து சிதறி அதிலிருந்த 30 பேர் இறந்தது
குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக