கொல்கத்தா: கொல்கத்தாவில் இப்தார் விருந்தில் கலந்துக் கொண்டு உணவை உண்டவர்களில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மீதி 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பாங்க்ரா என்னுமிடத்தில் நேற்று இரவு நடைபெற்ற இப்தார் விருந்தில் பரிமாறப்பட்ட உணவை 400க்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டனர். இந்நிலையில், அந்த உணவு கெட்டுப்போய் விஷமானதால், இன்று கொல்கத்தாவில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 வயதான பெண் குழந்தை மற்றும் 11 வயதான ஆண் குழந்தையும் பலியானார்கள். மேலும் 437 பேருக்கு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக