சனி, 14 ஜூலை, 2012

கடலூர் மாவட்டத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை

பரங்கிப்பேட்டை;கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் வெயில் கொடுமை நீடித்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதே போல் நேற்று இரவும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

 கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை ,வடலூர் மற்றும் சுற்றப்பகுதிகளில் நள்ளிரவு சுமார் 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இரவில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

 மழையின் போது காற்று பலமாக வீசியதால் கடலூர், நெல்லிக்குப்பம்
பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது.

அதிகபட்சமாக கடலூரில் 6.3 செ மீ ரும் பரங்கிபேட்டை யில் 5.7 செ மீ
மழை பதிவாகி உள்ளது

புதுவையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடியது. காலையில் விட்டுவிட்டு மழை தூறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக