பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெரு ஷாதி மஹாலில் 13-07-2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3
மணிவரை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைத்து அகில இந்திய இஸ்லாமிய மறுவாழ்வு
ஸ்தாபனம் மற்றும் புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனை நடத்திய "இலவச மருத்துவ
முகாம்" நல்லமுறையில் நடந்தது.
ஆண்கள் பெண்கள் என சுமார் 350 அனைத்து தரப்பு மக்களும்
கலந்து பலன் பெற்றனர்.
கண் - காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல், உட்பட
அனைத்து வியாதிகளும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த சேவை தொடரும் எனவும், பரங்கிப்பேட்டையில் ஒரு நிரந்தர
மருத்துவ சேவைக்கு ஆவன செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக