திங்கள், 16 ஜூலை, 2012

பரங்கிப்பேட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் திறப்பது எப்போது

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூன்று மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் எதிரில் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் போதுமான இட வசதி இல்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி இங்கு கைதிகள் அறை, காவலர்கள் தங்கும் வசதிகள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் போலீசார் பாதிக்கப்பட்டு வந்தனர். மழைக் காலங்களில் பதிவேடுகள் நனைந்தன.இந்நிலையில் கடந்த ஆண்டு பெருமாள் கோவில் தெரு போலீஸ் குடியிப்பு பகுதி அருகே அனைத்து வசதிகளுடன் புதியதாக போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் கட்டிமுடிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் காட்சி பொரு ளாகவே உள்ளது.இதனால் மின்மோட்டார், லைட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படாமல் சேதமடைந்து வருகிறது. மேலும் மழைக் காலம் வருவதற்குள் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டால் அலுவலக பதிவேடுகள் பாதுகாப்பாக வைக்கலாம்.
எனவே புதியதாக கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை திறக்க ஏ.எஸ்.பி., துரை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக