கடலூர் ; போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு "ஸ்பாட்பைன்' விதிக்கும் முறை ஓரிரு
நாளில் மாவட்டத்தில் அமலுக்கு வருகிறது.விபத்துகள் அதிகரிப்பு
தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை விட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றாமல் பயணம் மேற்கொள்வதன் காரணமாக சாலை விபத்துகளும், அதில் இறப்பவர்கள், உடல் ஊனமாசவார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலைமதிப்பற்ற மனித உயிர் சாலை விபத்துகளில் பறிக்கப்பட்டு வருவதை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆண்டுசதாறும் ஜனவரி முதல் வாரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடுவசதாடு, விபத்துகளை தவிர்க்க சாலை சமம்படுத்தும் பணிகளை சமற்கொண்டு வருகிறது.இருப்பினும், வாகன ஓட்டிகள் அவசரம் என்ற பெயரில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வதால் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.
மாநகர்களில் அறிமுகம்
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சபாக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு "ஸ்பாட் பைன்' விதிக்கும் திட்டம் மாநிலத்தில் முதல்முறையாக சென்னை மாநகரில் அமல்படுத்தப்பட்டது.
பின்னர் மதுரை, சகாவை மற்றும் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் சாலை விபத்து ஓரளவு குறைந்தது.
மாவட்டத்தில் இறப்பு அதிகரிப்பு
அசதசநரத்தில் பிற மாவட்ட பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 ஆயிரத்து 494 விபத்துகளில் 1,922 சபர் இறந்துள்ளனர். 14 ஆயிரத்து 393 பேர் காயமுற்றுள் ளனர்.
அரசு உத்தரவு
அதனைத் தொடர்ந்து "ஸ்பாட் பைன்' முறையை பிற மாவட்டங்களில் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட பிறகு மீண்டும் விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்பாட் பைன் அறிமுகம்
இந்த "ஸ்பாட் பைன்' திட்டத்தை மாவட்டத்தில் ஓரிரு நாட்களில் செயல்படுத்த போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுசவார் மீது சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பார்கள். அந்த அபராதத் தொகையை இன்ஸ்பெக்டரிடம் செலுத்தி, ரசீது பெற்ற பிறகே வாகனம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அபராத விவரம்
மோட்டார் வாகன சட்டம் 177 (ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, தலைக்கவசம் அணியாதது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது), 182 (2) (சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது) முதல் முறை 100 ரூபாய், இரண்டாம் முறை 300 ரூபாய்.பிரிவு 179 (பொய்யான தகவல் தருவது), 181, 182 (1) (லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது), 189 (அனுமதியின்றி சாலையில் சசாதனைசயாட்டம்), 191 (அனுமதியின்றி வாகனத்தின் வடிவமைப்பை மாற்றுவது) 500 ரூபாய்.பிரிவு 183 (1) (சவகமாக வாகனம் ஓட்டுதல்) முதல்முறை 400 ரூபாய். மறுமுறை 1,000 ரூபாய்.
பிரிவு 184 (விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை விரட்டிச் செல்லுதல்) முதல் முறை 1,000 ரூபாய், மறுமுறை 2,000 ரூபாய்.
பிரிவு 186 (தகுதியற்றவர்கள் வாகனம் ஓட்டுவது) முதல் முறை 200 ரூபாய், இரண்டாம் முறை 500 ரூபாய்.
பிரிவு 190(2) ( காற்று மற்றும் ஒலி மாசுபடுத்துதல்) முதல்முறை ஆயிரம் ரூபாய். இரண்டாம் முறை இரண்டாயிரம் ரூபாய்.
பிரிவு 192(1) (பதிவு செய்யாமல் வாகனத்தை ஓட்டுவது) முதல்முறை 2,500 ரூபாய். இரண்டாம் முறை 5,000.
பிரிவு 194(1) (அள வுக்கு அதிகமான எடை ஏற்றிச் செல்லுதல்) 2,000 ரூபாய் மற்றும் கூடுதல் எடைக்கு டன் ஒன்றுக்கு 1,000 ரூபாய்.
பிரிவு 196 ( காப்பீடு செய்யாதது) இருசக்கர வாகனம் 500 ரூபாய், சொந்த வாகனம் 700 ரூபாய், சபாக்குவரத்து வாகனம் 1,000 ரூபாய். இரண்டாம் முறை என்றால் அனைத்து வாகனங்களுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
வாகனம் ஓட்டுபவர்களே உஷார்.....








0 கருத்துகள்:
கருத்துரையிடுக