செவ்வாய், 10 ஜூலை, 2012

பரங்கிப்பேட்டை அருகே சூதாடிய நான்கு பேர் கைது

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே காசு வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதையெடுத்து சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு சூதாடிய ராமதாஸ், 30, அப்பாதுரை, 58, நடராஜன், 59, கண்ணன், 48, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 40 புள்ளி தாள்கள், 150 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக