சனி, 14 ஜூலை, 2012

மக்கா மஸ்ஜிது இமாம் சம்சுதீன் காஷிமியை தாக்க முயற்சி ! ஜமாலி கூட்டத்தரின் அநாகரிக செயல்


கடந்த வார ஜும்மா மேடையில் முஸ்லி யார்? என்ற தலைப்பில் மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் சம்சுதீன் காசிமி உரை நிகழ்த்தினார் அதில் சுன்னத் ஜமாஅத் என பேரில் வலிகேடுக்கள் செய்யும் கூட்டத்தினரை பற்றி இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி விழிப்புணர்வு உரை நிகழ்த்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுன்னத் ஜமாஅத்தின்(?) அக்ரம்கான் மற்றும் மேலை நாசர் தலைமையில் ஒரு குழுவினர் மக்கா பள்ளிவாசலில் புகுந்து சம்சுதீன் காசிமியை தாக்க முயன்றனர்.
அதிர்ச்சியடைந்த ஜமாத்தினர் இமாமுக்கு பாதிப்பில்லாத வகையில் தடுத்துள்ளனர் . இதற்கிடையில் இத்தகவல் காட்டுதீ போல் பரவ ஆரம்பித்ததும் ஏரளாமான சகோதரர்கள் மக்கா பள்ளியை நோக்கி படையெடுத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
சம்பவத்தை கேள்விப்பட்ட சமுதாய தலைவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் SM பாக்கர் ,தமுமுகவின் S .ஹைதர் அலி உள்ளிட்டவர்கள் மக்கா மஸ்ஜித்திற்கு நேரடியாக சென்று விசாரித்தனர்.
அப்பொழுது பேசிய INTJதலைவர் கண்டிக்க தக்க இந்த செயலை கண்டிப்பதோடு மட்டுமில்லாமல் தாக்க முயன்ற அமைப்பினரின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டன.
பள்ளிவாசல் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

3 கருத்துகள்:

  1. பெயரில்லாசனி, ஜூலை 14, 2012

    அட அசிங்கமே...நமக்குள்ளே அடிச்சிகிட்டா அப்புறம் ஏன் மற்றவர்கள் நம்மை அடிக்கமாட்டார்கள் கருத்துக்களை, கருத்துக்களால் தான் எதிர்கொள்ளனுமே தவிர இப்படி அசிங்கப்படுத்தகூடாது

    பதிலளிநீக்கு
  2. ஸலாம்....

    கேரளாவில் பிரபல்யமான முஸ்லியார் குறித்து பேசிய ஷம்சுத்தீன் காசிமி தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவி(!)யான P.ஜைனுல் ஆபிதின் குறித்தோ அல்லது தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் (TNTJ) குறித்தோ, அல்லது இவருக்காக வக்காலத்து வாங்கும் பெண் பித்தர் INTJ பாக்கர் குறித்தோ இதே ஜும்ஆ மேடையில் பேசுவதற்கு தைரியம் உள்ளதா? அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான் குறிப்பிடும் இந்தக் கருத்தை தைரியமாக வெளியிட வேண்டும்.

    அபூ தல்ஹா, சிதம்பரம்

    பதிலளிநீக்கு
  3. அவர்கள் அறிவுஜீவியோ இல்லையோ ஆனால் கேரளா முஸ்லியாரை
    பின்பற்றும் நீங்கள் உலகமாக அறிவுஜீவி என விளங்குகிறது

    அல்லாஹுவை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரர்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் இபுனு மஸ்வூத்(ரலி) ஆதாரம் புஹாரி

    அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி கட்டுவனாக.....

    அபு சாதிய

    பதிலளிநீக்கு