
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே இடப் பிரச்னை காரணமாக இரண்டு கோஷ்டிகள் மோதிக்
கொண்ட தகராறில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த அகரம்
பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது
உறவினர் சோமசுந்தரத்திற்கும் இடம் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு
இருகோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.இதில் ரவிச்சந்திரன், வாசுகி, சந்தானலட்சுமி, சுமதி,
பழனி, சுசிலா மற்றும் சோமசுந்தரம் கோஷ்டியை சேர்ந்த வேலுசாமி, சோமசுந்தரம், குமார்
ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில்
பரங்கிப்பேட்டை போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து சோமசுந்தரம், 49, வேலு, 58,
குமார், 29, ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஜெயலட்சுமி, ஆனந்த், நரசிம்மன்,
ரவிச்சந்திரன் உட்பட 16 பேரை தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக