சனி, 7 ஜூலை, 2012

நடந்து சென்றவர்கள் மீது மினிலாரி மோதி 4 பேர் பலி

டலூர்:மினி லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற 4 தொழிலாளர் இறந்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டையை சேர்ந்தவர்கள் சவுக்குமரம் வெட்டுவதற்காக நேற்று முன்தினம் பண்ருட்டியை அடுத்த சின்ன சேமக்கோட்டை கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள அய்யனார் கோயிலில் தங்கிவிட்டு நேற்று அதிகாலை சேலம் மெயின் ரோடு சின்ன சேமக்கோட்டை அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து கேரளாவுக்கு மீன் லோடு ஏற்றி வந்த மினி லாரி பயங்கர வேகத்தில் அவர்கள் மீது மோதியது. இதில் தனவேல் மகன் அருள்ஜோதி (20) மற்றும் சிவசந்திரன் (28) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குணசேகரன் (40), சேட்டு (55), வீரப்பன் (51), சுதாகர் (21), செஞ்சிவேல் (40) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டு, குணசேகரன் ஆகியோர் இறந்தனர். தூக்க கலக்கத்தில் டிரைவர் மினி லாரியை ஓட்டி வந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக