சனி, 28 ஜூலை, 2012

2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஆலோசனைக் கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டி (பொதுநிதி கருவூலம்) சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் வசூல் மற்றும் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் நுரர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு ஃபித்ராவைப் போன்றே இந்தாண்டும் நபர் ஒன்றுக்கு ஃபித்ரா தொகை ரூ 50 நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஃபித்ரா வினியோகத்தின்போது ஃபித்ரா பெறுகின்ற நபர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



நன்றி ; mypno.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக