கடலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று கடலூரில்
நிருபர்களிடம் கூறியதாவது
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி பதவி வேட்பாளராக பிரணாப்முகர்ஜி
அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்று தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
இந்திய அரசியல் சூழலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரைத்தான்
ஆதரிப்பது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவுசெய்துள்ளது.
ஈழ தமிழர் விவகாரத்தில் அவர் சாதகமாக செயல்படவில்லை என்றும் இந்திய ரூபாயை
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை அவர் வெளியிடவில்லை என்றும்
விமர்சனம் இருந்தாலும் அவருக்கு மாற்றாக பா.ஜ.க. நிறுத்தக் கூடிய வேட்பாளரை நாங்கள்
ஆதரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பிரணாப்முகர்ஜியை விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஆதரிக்கிறது.
எம்.பி. என்ற முறையில் எனது வாக்கு அவருக்கு அளிக்கப்படும். தனி ஈழம்
ஒன்றுதான் ஈழ சிக்கலுக்கு தீர்வு என்பதால் இதுபற்றி உலக தமிழர்களிடையே ஒரு
பொதுவாக்கெடுப்பு நடத்த டெசோ அமைப்பு வலியுறுத்துகிறது. அந்த கோரிக்கையை விடுதலை
சிறுத்தைகள் கட்சியும் வரவேற்பதால் டெசோ அமைப்பில் இணைந்து செயல்பட மனமுவந்து
ஒப்புதல் அளித்துள்ளோம்.
விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெறும் டெசோ மாநாட்டில் எங்கள் கட்சியை
சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக