பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாமை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க பேரூராட்சி சார்பில் கழிவுநீர் வாய்க்காலில் கொசு மருந்து அடித்தல்,தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றுதல், ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் தேக்கத்தையும், கழிவறை தொட்டிமேல் சாக்கு கட்டப்பட்டுள்ளதா என சுகாதாரத்துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.நேற்று கும்மத் பள்ளி தெருவில் பள்ளி மாணவர்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வழங்கி துவக்கி வைத்தார். துணை சேர்மன் நடராஜன், செயல் அலுவலர் கலைப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.









முதலில் தெருவில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யட்டும்.. பிறகு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு செய்யட்டும்.
பதிலளிநீக்குநல்ல வேல. டெங்கு காய்ச்சலுக்கு பரங்கிபேட்டை ஜமாஅத் என்ன செய்ய போகிறதுன்னு யாரும் கேட்கலே.
பதிலளிநீக்கு