அப்போது நகராட்சி பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால் பணி நின்றது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை அகற்றினால் மட்டுமே பணியை துவங்க முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் நெடுஞ் சாலை துறை இணைப்பு சாலை பணிக்கு டெண்டர் விட்டும் பணி துவங்க குடிநீர் குழாயை ரயில் பாதைக்கு கீழாக கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதியளிக்க வில்லை என நகராட்சி நிர்வாகமும், நகராட்சி நிர்வாகம் அனுமதியே கேட்கவில்லை என ரயில்வே நிர்வாகமும் குற்றம் சாட்டின.ஒரு வழியாக கடந்த மாதம் 15ம் தேதி லாரன்ஸ் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயை மாற்று வழியில் கொண்டு செல்லும் பணியை நகராட்சி துவக்கியது. அதில் வண்டிப்பாளையம் ரோடு, பான்பரி மார்க்கெட் வழியாக ரயில்வே பாதையை கடந்து பஸ் நிலையம் பின்புறம் வழியாக மீண்டும் லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரதான குழாயுடன் இணைக்கும் பணி நேற்று நடந்தது.ரயில்வே கேட் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் நேற்றிரவு 10 மணிக்கு சுரங்கப்பாதை பணியை ரயில்வே நிர்வாகம் துவக்கியது.
வெள்ளி, 15 ஜூன், 2012
கடலூரில் கிடப்பில் போடப்பட்ட லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதைப் பணி ரயில்வே நிர்வாகம் துவக்கியது.
அப்போது நகராட்சி பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால் பணி நின்றது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை அகற்றினால் மட்டுமே பணியை துவங்க முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் நெடுஞ் சாலை துறை இணைப்பு சாலை பணிக்கு டெண்டர் விட்டும் பணி துவங்க குடிநீர் குழாயை ரயில் பாதைக்கு கீழாக கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதியளிக்க வில்லை என நகராட்சி நிர்வாகமும், நகராட்சி நிர்வாகம் அனுமதியே கேட்கவில்லை என ரயில்வே நிர்வாகமும் குற்றம் சாட்டின.ஒரு வழியாக கடந்த மாதம் 15ம் தேதி லாரன்ஸ் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயை மாற்று வழியில் கொண்டு செல்லும் பணியை நகராட்சி துவக்கியது. அதில் வண்டிப்பாளையம் ரோடு, பான்பரி மார்க்கெட் வழியாக ரயில்வே பாதையை கடந்து பஸ் நிலையம் பின்புறம் வழியாக மீண்டும் லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரதான குழாயுடன் இணைக்கும் பணி நேற்று நடந்தது.ரயில்வே கேட் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் நேற்றிரவு 10 மணிக்கு சுரங்கப்பாதை பணியை ரயில்வே நிர்வாகம் துவக்கியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக