வியாழன், 28 ஜூன், 2012

துபை - நீச்சல் குளத்தில் மூழ்கி கேரளச் சிறுவன் பலி

துபை - கேரளாவைச் சார்ந்த ஒன்பது வயது சிறுவன் துபையில், நீச்சல் குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளான்.

துபையில் உள்ள கராமா என்ற இடத்தினைச் சார்ந்த இந்த ஒன்பது வயதுச் சிறுவன் அல் வர்கா என்ற இடத்தில் அவர் ஓன் இங்கிலீஷ்பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். நேற்று 26.06.2012, தனது நண்பனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றுள்ளான். அந்த வீட்டின் மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும்போது அதில் மூழ்கி இறந்துள்ளான்.

இறந்த சிறுவனின் குடும்பம் கேரளாவில் எர்ணாகுளத்தினைச் சார்ந்தவர்கள். இந்தத் தகவலை குடும்ப நண்பர் போனி ஜூனியர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக