ஞாயிறு, 24 ஜூன், 2012

பரங்கிப்பேட்டையில் முதியவருக்கு கத்திக்குத்து

பரங்கிப்பேட்டை:இடம் பிரச்னை காரணமாக முதியவரை கத்தியால் வெட்டிய கணவன், மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை சலங்குகாரத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி, 28. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமாருக்கும் இடம் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுந்தரியின் தந்தை மணியை, குமார் மற்றும் அவரது மனைவி மாலா, மகன் சாரதி ஆகியோர் கத்தியால் வெட்டிக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் வழக்குப் பதிந்து குமார், மாலா, சாரதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக