வியாழன், 14 ஜூன், 2012

பரங்கிப்பேட்டையில் சுகாதார ஆய்வு!

பரங்கிப்பேட்டை: சமீப காலமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் வரக்காரணமாக இருக்கின்ற கொசுக்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கழிவறை தொட்டி குழாய் மேல் சாக்கு கட்டப்பட்டுள்ளதா, கழிவு நீர்தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட இணை இயக்குநர் இவர்களின் உத்திரவின் பேரில், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் இருதயராஜ் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களும், பேரூராட்சி மன்ற சுகாதார அதிகரிகளும், பள்ளி மாணவர்களும் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினார்கள்.

மேலும் வீடுகளின் முன்பு எக்காரணத்தை முன்னிட்டும் நீர் தேங்காமலும், வீடு கட்டும் ஜல்லி ஓடுகளை உடனடியாக அகற்றியும் ஒத்துழைப்பு நல்குமாறும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். தெருக்களை சுத்தமாகவும், வீடுகளில் கொசு மொய்க்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்கூறினார்கள்.

நன்றி :mypno.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக