வியாழன், 14 ஜூன், 2012

பரங்கிப்பேட்டையில் 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு! பொது மக்கள் கடும் அவதி!!

பரங்கிப்பேட்டை அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இரு தினங்களாக கடுமையான மின் வெட்டு நிலவுகிறது காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது

இதினிடேயே மின்வினியோகம் இரவு நேரங்களில் மணிக்கு ஒரு முறை தடைபடுவதால் பரங்கிப்பேட்டை பொது மக்கள் 10 முதல் 12 மணிநேர மின்வெட்டுக்கு ஆளாகி அவதிபட்டு நிற்கிறார்கள்.

பொதுமக்கள், வியாபாரிகள் சிறு பிள்ளைகள்.முதியோர்கள் இந்த மின் வெட்டினால் பெரும் அவதிக்குள்ளாகி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

அரசு அறிவித்துள்ள  2 மணி   நேர தினசரி புதிய மின்வெட்டு முறை சில தினங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது

ஆனால் பரங்கிப்பேட்டையிலோ 8 மணிநேரத்ததையும் தாண்டி 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு நீடிக்கிறதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக