கடலூர்- சிதம்பரம் சாலையில் காரைக்காடு அருகே நடக்கும் தொடர் விபத்துகளை தவிர்க்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர்- விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பம் அருகே கடந்த 2009ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன. இதனால் கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலையில் சென்று காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலைக்கு சென்று வருகின்றன.
காரைக்காடு சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் சாலையை கடந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இதேபோன்று சிதம்பரம் சாலையில் இருந்து காரைக்காட்டிற்கு திரும்பும் பகுதியில் சாலை குறுகலாக உள்ளது. அங்குள்ள பாலத்தில் தடுப்பு ”வரும் இல்லாததால் வேகமாக வந்து திரும்ப முயலும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.இப்பகுதியில் விபத்தினை தவிர்க்க சிதம்பரம் சாலையில் காரைக்காடு வளைவு பகுதியில் "பேரி கார்டு' வைத்து வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்காமல் தடுக்கவும், காரைக்காடு சாலையை அகலப்படுத்தி வாகனங்கள் இடையூறின்றி சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக