கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நிர்வாக செயல்பாட்டின் தொய்வால் கடலூரில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கடலூர் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் விழிப் புணர்வை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடலூர் நடந்த விழாவில் மெகா சைஸ் துணிப்பையை வெளியிட்டு துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக்கின் நச்சு தன்மை குறித்து மக்களிடம் எடுத்துரைத்து முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்க ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கான அறிவிப்பும் வெளி யிடப்பட்டு பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக துணி பைகள் பயன்படுத்த வலி யுறுத்தி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இதை யாரும் செயல்படுத்துவதாக தெரியவில்லை. வழக்கம் போல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் முறை டீக்கடை, மளிகை உள்ளிட்ட அனைத்து சிறு, பெரு கடைகளில் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பிற்கு ஏற்றவாறு துறை அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தாமல் உள்ளது திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடலூரில் திட்டம் தொடங்கப்பட்டாலும் அதன் செயல்பாடு சுத்தமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆயிரக்கணக்கானோர் கூடும் மஞ்சை நகர் மைதானத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பொருட்கள் குவிந்து கிடப்பது அதைத்தான் காட்டுகிறது.
ஆட்சியர் அலுவலக சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக குவிந்தும், சிதறியும் கிடக்கிறது.
சுற்றுச்சூழலை பாதிக்க கூடிய பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு என நடத்தினால் மட்டும் போதாது, அதை அமல் படுத்துவதிலும் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், கடலூர் சாலையோரங்களில் சிதறியும், குவிந்தும் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக