பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாதில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் வைத்திருந்த குண்டு வெடித்தது. இதே போன்று கிர்குக், ஹில்லா ஆகிய 10 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 62 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த சில நாட்களாக ஈராக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவது அங்கே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக