வெள்ளி, 29 ஜூன், 2012

சென்னை ஏர்போர்ட் நாளை 6 மணி நேரம் மூடல்


சென்னை: சென்னை விமான நிலையம் நாளை ஆறுமணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 1 மணி முதல் மாலை 7 மணி வரை, விமான ஓடுபாதை பராமரிப்பிற்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஏர்இந்தியாவின் கொழும்பு, கொச்சி, டெல்லி, கொல்கத்தா விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக