வியாழன், 28 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை அருகே சாலையோரத்தில் கிடந்த 2 வயது பெண் குழந்தை



பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் சிதம்பரம் புறவழிச்சாலையில் சாலையோரம் 2 வயது பெண் குழந்தை ஆதரவற்று கிடந்தது.
சிதம்பரம் புறவழிச்சாலையில் புதன்கிழமை அதிகாலை சாலையோரம் துண்டில் சுற்றப்பட்டு 2 வயது பெண் குழந்தை ஒன்று அழுத நிலையில் கிடந்தது. அருகில் பால்பாட்டிலும், கிரேப்வாட்டர் பாட்டிலும் இருந்தது. குழந்தை அழுகிற குரல் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக போலீஸôர் 108 ஆம்புலன்ஸýக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அறிவழகன், மருத்துவ உதவியாளர் ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பெண் குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 மருத்துவமனையில் குழந்தைக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நலச்சங்க நிர்வாகிகளிடம் அநாதையாக கிடந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக