நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சமவேலைக்கு சம
ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ந் தேதி முதல் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 20-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. பிரச்சினைக்கு முடிவு
காணப்படாததால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். அதன்படி
அடுத்தடுத்து மறியல் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் அரை நிர்வாண போராட்டம்
நடந்தது. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் உக்கிரவேல் தலைமை தாங்கினார். பொது
செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. போராட்டத்தையொட்டி
பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு உமா விக்னேஸ்வரி தலைமையில் ஏராளமான
போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக