வன்முறையையும், கூடா உறவையும் அதிகமதிகம் காண்பிக்கும் தமிழகத் தொலைக்காட்சித் தொடர்களைத் தடைசெய்ய அரசு முன் வரவேண்டும் என்று மலேஷிய நுகர்வோர் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத் தொலைக்காட்சித் தொடர்கள் வன்முறையை அதிகம் வெளிப்படுத்துகின்றன. மேலும் வீட்டிலுள்ளோரின் நேரத்தை பொழுதுபோக்கு என்ற பெயரில் தின்றுத் தீர்க்கின்றன. இதனால் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களை ஒலிபரப்பாமல் இருக்க வேண்டும் என்று தடையாணை கோரியுள்ளது மலேஷிய நுகர்வோர் அமைப்பு
பினாங்கு மாவட்டத்தில் அப்பகுதி நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.வி.சுப்பாராவ் கூறுகையில் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில், பெரும்பாலும் வன்முறை காட்சிகள் தான் இடம் பெறுகின்றன.
இதை பார்க்கும் இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது பெண்களும் குடும்பத்தை கவனிக்காமல் தொலைக்காட்சி பார்ப்பதில் பொழுதை கழிக்கின்றனர். எனவே தொலைக்காட்சி தொடர்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். வன்முறை காட்சிகள் அடங்கிய தொடர்களை அரசு தணிக்கை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக