ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக