வெள்ளி, 11 மே, 2012

யுனெஸ்கோ பிராந்திய ஆலோசகராக அசன் முகமது ஜின்னா நியமனம்!!

 
Unesco Centre Has Appointed Hasan Mohammed Jinnah
ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள்-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக திமுகவின் இளைஞரணி மாநில துணைச் செயலர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நிர்வாக இயக்குநர் இந்த ஜின்னா. சட்டப்படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார் ஜின்னா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ம் ஆண்டு 'இளம் அரசியல் தலைவர்' என்று அமெரிக்க கவுன்சிலால் கவுரவிக்கப்பட்டிருக்கிறார் ஜின்னா. மாணவி சரிஹாசா ஈவ்டீசிங் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தவர் ஜின்னா என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நியமனம் குறித்து யுனெஸ்கோ அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றதுக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும்," என்று குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷ் வர்ஜீனிய தீவில் உள்ள யுனெஸ்கோ சென்டர் இதனை அறிவித்துள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக