பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு நிலைகளைப் பொருத்த அளவில், தமிழகக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், ப்ளஸ் 2 எனப்படும் மேல்நிலைக்கல்வித் தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் எழுதுகின்றனர். இவர்களுடைய தேர்வு தாள்கள் திருத்தப் பட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்வில் குறைவான மதிப்பெண் பெறும் சராசரி மாணவர்கள் அதிக மன உளைச்சல் அடைகின்றனர். அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என்ற ஏக்கத்திலும், பெற்றோரின் கண்டிப்பு, நண்பர்களின் கிண்டலாலும் மாணவர்கள் சிலர் விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இதனால் மதிப்பெண் முறையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதிப்பெண்ணுக்குப் பகரமாக கிரேடு எனப்படும் தரநிலை முறைமையை புகுத்துகிறது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய பள்ளி கல்வி வாரிய முறைமையில் படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு எனப்படும் தரநிலையே அளிக்கப்படுகிறது. அதே முறையை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.
பெற்றோர் அமைப்புகளும் மாணவர்களும் தொடர்ந்து அரசுக்கு கிரேடு தரநிலையைக் கொணரும் படி கோரிக்கை வைத்து வருவதால் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிரேடு முறையை கொண்டு வருவது தொடர்பாக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழக சட்டசபையில் வரும் 18ம் தேதி பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில், 10ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பதில், கிரேடு முறை கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக