சனி, 14 ஏப்ரல், 2012

சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் இரண்டு மாதத்தில் முடியும்


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உள்நாடு மற்றும் வெளிநாடு டெர்மினல்களின் விரிவாக்க பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும் என்று விமான நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள் குழுவின் தலைவர் அகர்வால் நிருபர்களிடம் பேசிய போது “ விரிவாக்க பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடையும்” என்றார்.
மேலும் ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ள க்ரீன் பீல்டு விமான நிலைய பணிகளும் நடந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழக அரசுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையத்தில் இரண்டாம் டெர்மினல் 7,000 கோடி செலவில் கட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக