சனி, 14 ஏப்ரல், 2012

ஏப்ரல் 15-ம் தேதி போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாம்


இந்தியா முழுவதும் இரண்டாவது தவணையாக ஏப்ரல் 15-ம் தேதி போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

இளம்பிள்ளை வாதத்தை (போலியோ) அறவே ஒழிக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் தவணையாக பிப்ரவரி 19-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.

இதில் இந்தியா முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கும், தமிழகத்தில் மட்டும் 65 லட்சம் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து அளிக்கப்பட்டது இரண்டாவது தவணையாக ஏப்ரல் 15-ம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள் உள்பட 40,399 மையங்களில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக