கடந்த ஆண்டில் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை உரிமை சட்டத்தை மத்திய அரசு
கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஐகோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் பதிவானது . வழக்கை விசாரித்த
தலைமை நீதிபதி கப்பாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து இன்று
தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் ; அனைவருக்கும் கல்வி என்பது அரசியலமைக்கு
சட்டமாக்கப்படுகிறது. இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி ஏழை மாணவர்களுக்கு 25 சதம் இடம்ஒதுக்கப்பட வேண்டும். இது அரசுபள்ளிகள்,
அரசு உதவி பெறுபள்ளிகள், மற்றும் பெறதா பள்ளிகள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு
அளிக்கப்படுகிறது. ஏற்கனவே சேர்க்கை முடிந்துள்ள பள்ளிகள் இது குறித்து பிரச்னை
இருக்காது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் பல
மாநிலங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக