தொடர் கொள்ளை சம்பவங்களை தடுக்க கடலூர்
மாவட்டம் முழுவதும் விடிய, விடிய வாகன சோதனை: பிடிவாரண்டு கைதிகள் 5 பேர்
பிடிபட்டனர்

இதையடுத்து இச்சம்பவங்களை தடுத்து குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் கடலூர்
மாவட்டம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன்
உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி,
விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி ஆகிய 7 உட்கோட்டங்களில்
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய போலீசார் வாகன சோதனை
நடத்தினார்கள்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 47 லாட்ஜிகளில் போலீசார் சோதனை
நடத்தினர். இந்த சோதனையின் போது பிடிவாரண்டு கைதிகள் 5 பேர் பிடிபட்டனர். மேலும்
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேர், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டிய 59 பேர் என
178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக