வியாழன், 5 ஏப்ரல், 2012

காசு மேல காசு வந்து... ஐபிஎல் போட்டிகள் மீது ரூ. 75,000 கோடிக்கு பெட்டிங்!


IPL5மும்பை: ஐந்தாவது ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து ரூ. 75 ஆயிரம் கோடி அளவுக்கு பெட்டிங் பணம் புழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் என்றாலே பண மழைதான். அதிலும் இந்தியாவில்
 
 
 
நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் என்றால் கோடிகளின் அட்டகாசம்தான். ஐபிஎல் போட்டிகளில் எதைத் தொட்டாலும் காசுதான்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் அதை வைத்து பணம் பார்க்கும் புக்கிகளின் தொழிலும் படு சூடாக தொடங்கி விட்டதாம். நாடு முழுவதும் ஏராளமான புக்கிகள் இதில் ஈடுபட்டுள்ளனராம். மொத்தமாக ரூ. 75 ஆயிரம் கோடி அளவுக்கு இதில் பணம் புழங்கி வருவதாக பரபரப்பாக கூறுகிறார்கள்.
எந்த வீரர் சிக்ஸ்ர்கள் அதிகம் அடிப்பார், யாருக்கு அதிக விக்கெட்கள் கிடைக்கும், யார் அதிக ரன்கள் எடுப்பார்கள், சச்சின் எத்தனை ரன் எடுப்பார், டோணி எவ்வளவு எடுப்பார், எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது உள்பட ஏகப்பட்ட ஏரியாக்களில் இந்த பெட்டிங் நடக்கிறதாம்.

மேலும் வீரர்களை தங்கள் பக்கம் இழுககும் முயற்சிளில் பலம் வாய்ந்த புக்கிகள் ஈடுபட்டுள்ளதாகவும் பரபரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக