துபாய் :யுஏஇ சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தொழில்நுட்ப துறையிலும் நவீன திட்டங்களை அறிமுகம் செய்வதிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் இன்ஜினியர்கள், கணக்காளர்கள், மார்கெட்டிங்துறை வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை வல்லுனர்கள் பட்டதாரிகள் தாங்கள் பணியாற்ற விரும்பும் நாடுகளில் யுஏஇ முதலிடம் பெற்றுள்ளது.
இதனை லிங்க்டின் என்ற முண்ணனி இணையதளம் வெளியிட்டுள்ளது.தொழில் துறை பட்டதாரிகள் பேர் வேலைக்கு செல்ல விரும்பும் நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்டவைகளை பின் தள்ளி யுஏஇ முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதுமிருந்து 380 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட இந்த இணையதளத்தில் பல்வேறு துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 2014 ஜனவரியிலிருந்து 2014 டிசம்பர் வரை கணக்கெடுக்கும் போது மிகபெரிய அளவில் தொழில்துறை வல்லுநர்கள் தாங்கள் பணியாற்றுவதற்காக ஐக்கிய அரபு குடியரசுக்கு இடம்பெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள். மேலும் புதியதாக வேலை தேடும் பட்டாதாரிகள் அதிகளவில் யுஏஇ செல்வதை விரும்பிகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக