சென்னை :போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்திலுள்ள 80 பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத பி.இ இடங்கள் காலியாக உள்ளன. வேலையின்மை, கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஆகிய காரணங்களால் பி.இ படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துள்ளது. இதனால் 80 பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலை உருவாகியுள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யவும் பல பொறியியல் கல்லூரிகள் அனுமதி கோரியுள்ளன. பி.இ மற்றும் எம்.இ படிப்புகளுக்கு மவுசு குறைந்துள்ளதால், பல மாணவர்கள் காலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் உயர்கல்வியில் மறுமலர்ச்சியாக அனைவருக்கும் ஆன்லைன் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஆண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மின் ஆளுமை முறையுடன் கூடிய புதிய கல்வித் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக