வியாழன், 22 ஜனவரி, 2015

PMA ஜித்தா 20 ஆம் ஆண்டு பொதுகுழு மற்றும் நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம்


ஜித்தா: கடந்த ஜனவரி 09, 2015 , அன்று சவூதி அரேபியா ஜித்தா  நகரில், பரங்கிபேட்டை முஸ்லிம் அசோசியேஷன் (PMA) 19ம் ஆண்டு நிறைவு மற்றும் 20ம் ஆண்டு நிர்வாகிகள் தேர்வு மற்றும்  பொதுக்குழு கூட்டம் ஷரபியா லக்கி தர்பார்  ஹோட்டலில் நடைப்பெற்றது .  ஜித்தா  மண்டலத்திலிருந்து ஜித்தா வாழ் பரங்கிப்பேட்டையர்கள் 50-க்கு மேற்பட்டர் கலந்துக்கொண்டனர்.

 I. முஹம்மது ஜமில் கிராத் ஓதி கூட்டத்தை துவங்கினார்  அதை தொடர்ந்து ஷாபி  தலைமையுரை ஆற்றினர். தற்போதய PMA தலைவர்  M. கவுஸ் ஹமீது தனது உரையில் PMA யின் செயல்பாடுகளை விளக்கி பேசினார்  அதை தொடர்ந்து பொருளாளர் ஜனாப் M.அப்துல் ரஜாக் 2014ம் ஆண்டு கணக்குகளையும் சமர்பித்தார் .
கடந்த ஆண்டின் சிறந்த செயல் பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அணைத்து PMA உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்து, புதிய நிர்வாகிகளிடம் ஜனாப் M. கவுஸ் ஹமீது பொறுப்புகளை ஒப்படைத்தார்.

மேலும் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள்,பொதுகுழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள்
தலைவர் : ஜனாப் U. ஷாஹுல் ஹமீது
துணைத் தலைவர்: ஜனாப் M.அப்துல் ரஷீத்
செயலாளர் ஜனாப் G. முஹம்மத் பைசல்
துணை செயலாளர் ஜனாப் அன்வர் அலி
பொருளாளர் ஜனாப் M. அப்துல் ரஜாக்

செயற்குழு நிர்வாகிகள்
ஜனாப் அப்துல்ரஜ்ஜாக் மரைக்கார்,

ஜனாப் H. முகமது அப்துல் காதர்
ஜனாப் முகமது ஜமீல்
ஜனாப் M கவுஸ் ஹமீது,

 புதிய தலைவர்  ஜனாப் U. ஷாஹுல் ஹமீது தனது உரையில் எதிர்கால செயல்பாடுள்  பற்றியும்
பரங்கிபேட்டை  கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து அதனை  ஏழைஎளிய மக்களின்   அடிமட்டம்  வரை  கொண்டு  செல்ல  இவ்வமைப்பு பாடுபடும் என்றும் தெரிவித்தார்  பின்  துணைத் தலைவர்: ஜனாப் M.அப்துல் ரஷீத் அவர்கள் நன்றி உரையுடன்,இரவு உணவிற்கு பின் கூட்டம்  நிறைவடைந்தது.

தகவல் :PMA ஜித்தா

1 கருத்துகள்:

  1. சமுதாய நலனுக்காக சங்கம் அமைத்து அதனை இது நாள் வரையில் நலமுறையில் செயல்படுத்தி வரும் ஜித்தா வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு